Map Graph

விசாகப்பட்டினம் பல்லுயிர் பூங்கா

விசாகப்பட்டினம், பல்லுயிர் பூங்கா, என்பது அயல் சூழலில் தாவரங்களைப் பாதுகாக்கும் தாவரவியல் பூங்கா ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, இராணி சந்திரமணி தேவி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 ஏக்கர்கள் (1.2 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. அரசு சாரா, பதிவுசெய்யப்பட்ட, சுற்றுச்சூழல் அமைப்பான விசாகப்பட்டினம் ஓங்கில் இயற்கைப் பாதுகாப்பு சமூகத்தினால் (டி.என்.சி.எஸ்) 13 ஆண்டுகளாகப் பராமரித்து வரப்படுகிறது. தற்பொழுது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் விசாகப்பட்டினம் பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பராமரிக்கப்படுகிறது. இந்த பூங்கா 5 ஜூன் 2002 அன்று திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 2,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. மேலும் 60 வகையான பறவைகள் மற்றும் 105 வகையான பட்டாம்பூச்சிகளின் வருகைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வுணர்வினையும், ஆராய்ச்சியாளர் மற்றும் தாவரவியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்களுக்கு "வாழ்க்கை ஆய்வகமாக" உள்ளது.

Read article
படிமம்:DNCS-Biodiversity_Park,_Visakhapatnam_Inauguration_5th_June_2002.jpgபடிமம்:Lay_out_plan_of_Biodiversity_Park,_Visakhapatnam_DNCS-VMRDA.jpg